தமிழ் இலக்கியம்

புறநானூறு

புறநானூறு புறப்பொருள் சார்ந்த நானூறு பாக்களை கொண்ட நூல் ஆதலின் இப்பெயர் பெற்றது. புறநானூறு சங்ககால எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். புறநானூற்றின் பாடல்கள் அகவற்பா வகையை சார்ந்தாகும்.இந்நூலில் நாலு முதல் நாற்பது அடிகளை கொண்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன. புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் புறநானூறு குறிப்பிடுகிறது.இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன.

View புறநானூறு Onbook
 

குறுந்தொகை

குறுந்தொகை சங்ககால எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.இந்நூல் குறுகிய அடிகளை கொண்ட பாக்களால் ஆனமையால் இந்நூல இப்பெயர் பெற்றது .இது ஒரு அகப்பொருள் நூலாகும் .இப்பாடல்களை தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.குறுந்தொகையே பல நூல் ஆசிரியர்களால் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் ஆதலின் எதுவே எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக தொக்குகப்பட்ட நூல் என கருதப்படுகிறது .

குறுந்தொகை சுவடிககள் பலவற்றை சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன் தான் இயற்றிய புத்துரையுடன் 1915 இல், பதிப்பித்து வெளியிட்டார்.

View குறுந்தொகை Onbook
 

கலித்தொகை

கலித்தொகை கலிப்பாவினால் பாடப்பட்ட நூல் ஆதலின் இப்பெயர்பெற்றது.கலிப்பா ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் போன்ற சிறப்பான அமைப்புக்களால் அமைந்திருக்கும்.இந்நூல் ஒரு அகப்பொருள் சார்ந்த சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
வேறு எந்த அகத்திணை நூல்களும் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகை மட்டுமே எடுத்துரைக்கிறது. கலித்தொகை காதலர்தம் அகத்தொகையாக கருதப்படுகிறது. கலித்தொகை பாக்களின் மூலம் பண்டைக்கால மக்களின் வாழ்க்கை, காலத்தின் தன்மை, நிகழ்ச்சிகள், மரபுகள் ஆகியவற்றை அறியலா

View கலித்தொகை Onbook
 

பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து அகவாழ்க்கையோடு தொடர்புடைய புறவாழ்க்கையின் புறப்பொருள் பற்றிய நூல் ஆகும் . இந்நூல் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூலாகும். பதிற்றுப்பத்து சேர மன்னர்கள் பத்து பேர் பற்றி பத்து புலவர்கள் பாடிய நூலாகும். இதில் முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைகப்பெறவில்லை.இந்நூல் சேர மனனர்களின் ஆட்சி சிறப்பு ,கொடை, காதற்சிறப்பு, கல்வித் திறம், புகழ் நோக்கு, போர்த்திறம், குடியோம்பல் முறை, பகையரசர் பால் பரிவு, போன்றவற்றை விளக்குகின்றது.

View பதிற்றுப்பத்து Onbook
 

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். எம்பெருமான் முருகனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு வீடுபேறு அடைந்த ஒருவன் மற்றவர்க்கு வழிகாட்டுதல் போன்று அமைந்த நூல் ஆதலின் இப்பெயர் பெற்றது. திருமுருகாற்றுப்படை ஆசிரியப்பாவால் பாடப்பெற்றது.இந்நூல் 317 அடிகளை கொண்டுள்ளது. திருமுருகாற்றுப்படையை இயற்றியவர் நக்கீரர் ஆவார். திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளை பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. திருமுருகாற்றுப்படை சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்..

View திருமுருகாற்றுப்படை Onbook
 

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். பொருநராற்றுப்படை, ஆற்றுப்படை நூலின் பாட்டுடைத்தலைவன் கரிகால் வளவன் என்னும் சோழ மன்னன் ஆவான் . இப்பாடலை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார்.இதன் பாடல்கள் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பொருநராற்றுப்படை 248 அடிகளை கொண்டு விளங்குகிறது.

View பொருநராற்றுப்படை Onbook
 

சிறுபாணாற்றுப்படை

ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட ஆற்றுப்படை நூல் சிறுபாணாற்றுப்படையாகும். சிறுபாணாற்றுப்படை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நல்லியக்கோடன் மன்னனிடம் பரிசு பெற்ற பாணன் ஒருவன் வழியிற் கண்ட மற்றொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

View சிறுபாணாற்றுப்படை Onbook
 

பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனை பாட்டுடைத்தலைவனாய் கொண்ட நூல். வறுமையால் வாடும் பேரியாழ் வாசிக்கும் பாணன் ஒருவனை மற்றொரு பாணன் தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததுள்ளது. பெரும்பாணாற்றுப்படையை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆவார். பெரும்பாணாற்றுப்படை 500 அடிகளைக் கொண்டு அமைந்ததுள்ளது,

View பெரும்பாணாற்றுப்படை Onbook
 

முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டு முல்லைத்திணைக்குரிய அகப்பொருள் நூலாகும். முல்லைப்பாட்டு 102 அடிகளை கொண்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டவை ஆகும்.இது சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்பபடுகிறது எனினும் தலைவனது பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை. முல்லைப்பாட்டை இயற்றியவர் நப்பூதனார் ஆவார்.

View முல்லைப்பாட்டு Onbook
 

மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சி சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.இதை இயற்றியவர் மாங்குடி மருதனார் ஆவார்.இப்பாடல்கள் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் அமைந்துள்ளது.இப்பாடல்களின் முலமாக மதுரையின் அழகையும், பாண்டிய நாட்டின் பெருமைகளையும் அறியலாம். மதுரைக்காஞ்சி 782 அடிககளை கொண்டு விளங்குகிறது.

View மதுரைக்காஞ்சி Onbook
 
 
Top