ஒளவையார் அருளிச்செய்த ஆத்திசூடி

ஆத்திச்சூடி/Aathichudi

ஆத்திச்சூடி எளிமையான வரிகளைக் கொண்டு அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இயற்றப்பட்ட நீதிநூல் ஆகும். ஆத்திச்சூடியை இயற்றியவர் ஔவையார். ஆத்திச்சூடி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும். ஆத்திச்சூடி உயிர் வருக்கம், உயிர்மெய் வருக்கம், ககர வருக்கம், சகர வருக்கம், தகர வருக்கம், நகர வருக்கம், பகர வருக்கம், மகர வருக்கம், வகர வருக்கம் என பிரித்து தொகுக்கலாம். ஆத்திச்சூடியில் 109 பாடல்களும், ஒரு கடவுள் வாழ்த்தும் இடம்பெற்றுள்ளன.

குழந்தைகள் எளிதில் புரிந்து மனதில் பதியவைக்க வேண்டிய அறநூல் இது.

Edubilla.com, நம் வருங்கால சந்ததிகளின் நலனுக்காக ஆத்திச்சூடியின் பொருள், ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் குழந்தைகள் மகிழும் வகையில் பலவண்ணப் படங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளது.

கடவுள் வாழ்த்து

பாடல்:

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.

ஆத்தி சூடி – திருவாத்தி மலர்மாலையை அணிந்த
யமர்ந்த – சிவபெருமானால் விரும்பப்பட்ட ( மேல் அமர்ந்த )
தேவனை- ஆனைமுகக் கடவுளை
ஏத்தி ஏத்தி – பலகாலும் (மேலும் மேலும்)
தொழுவோம் யாமே – நாம் வணக்கம் செய்வோம்

பொருள்:

திருவாத்தி மலர்மாலையை அணிந்த சிவபெருமானால் விரும்பப்பட்ட ஆனைமுகக் கடவுளை நாம் பலகாலும் வணக்கம் செய்வோம்!!

வருக்கம்/Varukkam

1.  உயிர் வருக்கம்/Uyir Varukkam

2.  உயிர்மெய் வருக்கம்/Uyirmei Varukkam

3.  ககர வருக்கம்/Kagara Varukkam

4.  சகர வருக்கம்/Sagara Varukkam

5.  தகர வருக்கம்/Thagara Varukkam

6.  நகர வருக்கம்/Nagara Varukkam

7.  பகர வருக்கம்/Pagara Varukkam

8.  மகர வருக்கம்/Magara Varukkam

9.  வகர வருக்கம்/Vagara Varukkam

 
Top