தமிழ் இலக்கியம்

நெடுநல்வாடை

நெடுநல்வாடை பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. நெடுநல்வாடையை இய்யற்றியவர் மதுரை நக்கீரர் ஆவார்.இதன் கதைகளம் வாடை காலத்தில் அமைந்துள்ளது.தலைவனை பிரிந்து வாழும் தலைவிக்கு இது நீண்ட வாடையாகவும்.போரில் வெற்றி பெற்றமையால் தலைவனுக்கு நல் வாடையாகவும் அமைந்தமையால் இந்நூல் இப்பெயர்பெற்றது.

View நெடுநல்வாடை Onbook
 

குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.இதை இயற்றியவர் கபிலர் ஆவார்.இந்நூல் அகப்பொருள் சார்ந்த நூலாகும். அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு, இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல், குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் ஆகிய நிகழ்வுகள் குறிஞ்சித்திணைக்குரியசிறப்பாகும். குறிஞ்சிப் பாட்டு குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் படாலாக அமைகிறது.

View குறிஞ்சிப்பாட்டு Onbook
 

பட்டினப்பாலை

பட்டினப்பாலையை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். பட்டினப்பாலை காவிரிப்பூம்பட்டினத்தின் வளம்,மக்களின் வாழ்க்கை முறை, கரிகால் சோழனின் வீரம், போர்திறம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. பட்டினப்பாலை சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். பட்டினப்பாலை 301 அடிகளை கொண்டு விளங்குகிறது.

View பட்டினப்பாலை Onbook
 

மலைபடுகடாம்

மலைபடுகடாம் நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். மலைபடுகடாம் 583 அடிகளை கொண்டுள்ளது. மலைபடுகடாமை இயற்றியவர் பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகனார் ஆவார். மலைபடுகடாமை கூத்தராற்றுப்படை என்றும் அழைப்பர். நவிர மலையின் தலைவனின் கொடைத்திறம், வீரம். மக்களின் வாழ்க்கைமுறை குறித்து மலைபடுகடாம் எடுத்துரைக்கின்றது.

View மலைபடுகடாம் Onbook
 
 
Top