மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறிவுரைகளுடன் புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி/Puthiya Aathichudi

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பல புரட்சிகரமான கருத்துக்களை தமது பாடல்களின் மூலம் எடுத்துரைப்பதில் வல்லவர். ஔவையார் இயற்றிய ஆத்திச்சூடியை போன்றே பாடல் அமைப்புடன் பல புதிய சிந்தனைககளை கொண்டு புதிய ஆத்திச்சூடியை இருபதாம் நூற்றாண்டில் இயற்றினார். புதிய ஆத்திச்சூடியில் 109 பாடல்களும்,ஒரு கடவுள் வாழ்த்தும் அடங்கும்.

அதில் “வேதம் புதுமைசெய்”, ”தாழ்ந்து நடவேல்”, “போர்த்தொழில் பழகு” போன்ற புரட்சிகரமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

காலத்தால் அழியா மகாகவியின் புதிய ஆத்திச்சூடியை உலக மக்கள் அனைவரும் அறிய நமது edubilla.com இணையதளத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தொகுத்து வழங்கியுள்ளோம்.இதனை படித்துப் பயன் பெற வாழ்த்துகிறோம்.

காப்பு - பரம்பொருள் வாழ்த்து

ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;

கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;

மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;

ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

வருக்கம்/Varukkam

1.  உயிர் வருக்கம்/Uyir Varukkam

2.  ககர வருக்கம/Kagara Varukkam

3.  சகர வருக்கம்/Sagara Varukkam

4.  நகர வருக்கம்/Thagara Varukkam

5.  நகர வருக்கம்/Nagara Varukkam

6.  பகர வருக்கம்/Pagara Varukkam

7.  மகர வருக்கம்/Magara Varukkam

 
Top