அதிவீர ராம பாண்டியர் பாடிய வெற்றிவேற்கை

வெற்றிவேற்கை – Vettrivetkai

கடவுள் வாழ்த்து

பாடல்:

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புதமலர் தலைக்கு அணிவோமே

விளக்கம்:

ப்ரணவப் பொருளான, பெருந்தன்மையுள்ள விநாயகக் கடவுளின் பாதமலர்களை தலையில் சூட்டிக் கொள்வோமாக.

English Translation

We will wear the flower-like feet of the One with five arms
who represents the meaning of the word ‘Om’

English Transliteration

Piranavap porulam peruntakai ainkaran
sarana arputamalar talaikku anivome

பாடல்கள்

பாடல் : 1
எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்.

விளக்கம்
கல்வி கற்பித்த ஆசான் இறைவன் ஆவான்

Transliteration
Eluttari vitthavan iraiva naakum

English Translation
Supreme is the one who initiates learning.

பாடல் : 2
கல்விக் கழகு கசடற மொழிதல்

விளக்கம்
குற்றமின்றி பேசுதலே கற்ற கல்விக்கு அழகு.

Transliteration
Kalvik kalaku kacatara molital

English Translation
The beauty of learning is to speak without ambiguity.

பாடல் : 3
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

விளக்கம்
சுற்றத்தோடு கூடிய பெருங்குடும்பத்தை வகிப்பதே செல்வர்க்கு அழகு

Transliteration
Celvark kalaku chezunkilai thaankuthal

English Translation
The beauty of the wealthy is to support their dear relatives.

பாடல் : 4
வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்

விளக்கம்
வேதம் ஓதுவதும், ஒழுக்கத்தோடு இருப்பதுமே ப்ராம்மணர்களுக்கு அழகு

Transliteration
Vetiyark kalaku vethamum olukkamum

English Translation
The beauty of a priest is to lead a moral and religious life

பாடல் : 5
மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை

விளக்கம்
நீதி தவறாது முறையோடு அரசு செய்வதே அரசர்க்கு அழகு

Transliteration
Mannavark kalaku cenkol muraimai

English Translation
The beauty of a king is to rule with justice

பாடல் : 6
வணிகர்க் கழகு வளர்பொரு ளீட்டல்

விளக்கம்
குன்றாத செல்வத்தை சேர்ப்பதே வைச்யர்க்கு அழகு

Transliteration
Vanikark kalaku valarporu leettal

English Translation
The beauty of a merchant is to increase his wealth

பாடல் : 7
உழவர்க் கழகு ஏர் உழுதூண் விரும்பல்

விளக்கம்
விவசாயம் செய்து உண்பதே உழவர்க்கு அழகு

Transliteration
Ulavark kalaku yer uzuthoon virumpal

English Translation
The beauty of the farmer is to live by his produce.

பாடல் : 8
மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்

விளக்கம்
வரப்போவதை முன்கூட்டியே ஆராய்ந்து உரைப்பதே மந்திரிக்கு அழகு

Transliteration
Manthirik kazhku varumporuluraithal

English Translation
The beauty of the minister is to anticipate the future

பாடல் : 9
தந்திரிக் கழகு தறுகண் ஆண்மை

விளக்கம்
அஞ்சாமையும், வீரமுமே தளபதிக்கு அழகு.

Transliteration
Thanthitik kazhku thrugan aanmai

English Translation
The beauty of the commander is to show bravery

பாடல் : 10
உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்

விளக்கம்
விருந்தினரோடு உண்பதே உணவிற்கு அழகு

Transliteration
Undik kazhku viruntho dundal

English Translation
The beauty of a meal is to share with the hungry

பாடல் : 11
பெண்டிர்க் கழகுஎதிர் பேசா திருத்தல்

விளக்கம்
எதிர்த்துப் பேசாமலிருப்பதே பெண்களுக்கு அழகு

Transliteration
Pendirk kazhkuyethir pesa thirithal

English Translation
The beauty of women is to avoid arguments

பாடல் : 12
குலமகட் லழகுதன் கொழுநனைப் பேணுதல்

விளக்கம்
கணவனைப் பார்த்துக் கொள்வதே குடும்பப் பெண்ணுக்கு அழகு

Transliteration
Kulamakat lazhkuthan kozhunanaip penuthal

English Translation
The beauty of a good wife is to honour the husband

பாடல் : 13
விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்

விளக்கம்
உடலைப் பிறர் கவரும் வண்ணம் அலங்கரித்துக் கொள்வது விலைமாதர்க்கு அழகு

Transliteration
Vilaimakat kazhkuthan meni minikuthal

English Translation
The beauty of a prostitute is to keep her body shining

பாடல் : 14
அறிஞற் கழகு கற்றுணர்ந் தடங்கல்

விளக்கம்
கல்வி பயின்று, ஆய்ந்தறிந்த அறிஞர்க்கு அழகு அடக்கமாக இருப்பது.

Transliteration
arinyar kazhku kattrunanth thadangal

English Translation
The beauty of the wise is to be humble about his learning

பாடல் : 15
வறிஞர்க் கழகு வறுமையில் செம்மை

விளக்கம்
வறுமையில் வாடும்போதும் ஒழுக்கமாக இருப்பது வறியவர்களுக்கு அழகு

Transliteration
varinyark kazhku varumaiyil semmai

English Translation
The beauty of the poor is to lead an unblemished life

பாடல் : 16
தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர் கிருக்க நிழலா காதே.

விளக்கம்
சுவைமிக்க பெரும் பழத்தின் விதையில் வானுயர வளர்ந்தாலும், பனைமரம் ஒருவருக்கும் நிழல் தராது

Transliteration
thempadu panaiyin thiralpazhth thoruvithai
vaanura vongi valampera valarinum
oruvar kirukka nizhlaa kaathe

English Translation
The Palmyra palm though grows sky high from a large seed yet cannot offer shade
even to a single person. (The wealth of a miser is not usefull even to a single needy)

பாடல் : 17
தௌ்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன்சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

விளக்கம்
ஆலமரத்தின் சிறிய பழத்தின் விதை, தெளிந்த நீர்கொண்ட குளத்து மீனின் முட்டையை விட சிறியதே ஆயினும், பெருமை மிக்க யானை, அலங்கரித்த தேர், காலாட்படையோடு கூடின மன்னர்க்கு நிழல் தரும்.

Transliteration
Thelliya aalin sirupazhth thoruvithai
thenneeraik kayathuch sirumeensinaiyinum
nunnithe aayinum annal yaanai
anither puravi aatperum padaiyodu
mannark kirukka nizhlaa kumme

English Translation
The mighty ‘Banyan tree’ that is large enough to offer shade to battalions of a king’s army, grows out of a tiny seed smaller than a fish-egg. (Many people benefit from those who are willing to give, though they may not possess much wealth.)

பாடல் : 18
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்

விளக்கம்
உருவத்தில் பெரியவராக இருப்பவரெல்லாம் பெரியவர்கள் இல்லை.

Transliteration
Periyo rellam periyaru mallar

English Translation
The elders are not always worthy of respect.

பாடல் : 19
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்

விளக்கம்
உருவத்தில் சிறியவராக இருப்பவரெல்லாம் சிறியவர்கள் இல்லை.

Transliteration
Siriyo rellam siriyaru mallar

English Translation
The youngsters do not always deserve disdain.

பாடல் : 20
பெற்றோ ரெல்லாம் பிள்ளை களல்லர்

விளக்கம்
நாம் பெற்ற எல்லா பிள்ளைகளுமே பிள்ளைகளாக இருக்க மாட்டார்கள்.

Transliteration
Petro rellam pillai kalallar

English Translation
Children do not always behave like children

பாடல் : 21
உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்

விளக்கம்
எல்லா உறவினரும் உண்மையில் உறவினர் இல்லை.

Transliteration
Utrro rellam uravina rallar

English Translation
Your kith and kin may not always wish you well

பாடல் : 22
கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்

விளக்கம்
மணம்புரிந்து கொண்ட எல்லாரும் மனைவிகள் அல்ல

Transliteration
Kondo rellam pendiru mallar

English Translation
The one you married may not always behave like a wife

பாடல் : 23
அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.

விளக்கம்
சுண்டக் காய்ச்சினாலும், பசுவின் பால் சுவை குறையாது.

Transliteration
Adinum aavinpaal thansuvai kunraathu

English Translation
The milk does not lose its taste even when heated

பாடல் : 24
சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது

விளக்கம்
நெருப்பிலிட்டு வாட்டினாலும் சுத்தமான பொன் ஒளி குறையாது

Transliteration
Sudinum sempon thanoli kedaathu

English Translation
Gold does not lose its shine even when burnt.

பாடல் : 25
அரைக்கினும் சந்தணம் தன்மணம் அறாது

விளக்கம்
நன்றாக அரைத்தாலும் சந்தனத்தின் மணம் குறைவதில்லை

Transliteration
Araikinum santhanam thanmanam araathu

English Translation
Sandal wood does not lose its smell even when ground to a paste.

பாடல் : 26
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.

விளக்கம்
எவ்வளவு புகைத்தாலும் கரிய அகில்கட்டை துர்மணம் வீசாது

Transliteration
Pukaikinum karakil pollaangku kamazhathu

English Translation
Agar wood’ does not give a bad smell even when burnt.

பாடல் : 27
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது

விளக்கம்
எவ்வளவு கலக்கினாலும் குளிர்ந்த கடல் சேறு ஆகிவிடாது.

Transliteration
Kalakinum thankadal seru aagathu

English Translation
Sea does not turn muddy even when churned.

பாடல் : 28
அடினும்பால் பெய்துகைப்பு
அறாதுபேய்ச் சுரைக்காய்.

விளக்கம்
பால் விட்டுக் காய்ச்சினாலும், பேய்ச்சுரைக்காய் கசப்பு நீங்காது

Transliteration
Adinum peythukaippuaraathupeich suraikaay

English Translation
Even when cooked in milk, bitter-gourd does not lose its bitterness.
(Even when treated with kindness, the wicked will not change their character)

பாடல் : 29
ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது

விளக்கம்
பலவித வாசனைகளை சேர்த்தாலும், உள்ளிப்பூண்டு நறுமணம் வீசாது

Transliteration
Ottinu m palvirai ulli kamazhathu

English Translation
Even when mixed with other items garlic will not lose its smell.

பாடல் : 30
பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.

விளக்கம்
நம் நடத்தையால் தான் நமக்கு மேன்மையும், கீழ்மையும் வரும்

Transliteration
Perumaiyum sirumaiyum thaanthara varume

English Translation
Praises and insults result from one’s own action

பாடல் : 31
சிறியோர் செய்த சிறு பிழை யெல்லாம்
பெரியோ ராயின் பெறுப்பது கடனே.

விளக்கம்
சிறியவர்கள் செய்யும் சிறு, சிறு பிழைகளையெல்லாம் பெரியவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்

Transliteration
Siriyor seitha siru pilai yellam
periyo raayin peruppathu kadane

English Translation
It is incumbent on the noble men to pardon the misdeeds of small minded men.

பாடல் : 32
சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின்
பெரியோரப் பிழை பொறுத்தலு மரிதே

விளக்கம்
சிறியோர் செய்யும் பிழைகள் பெரிதாக இருந்தால், பெரியோர்கள் அதை பொறுத்துக் கொள்ளல் அரிது

Transliteration
siriyor perunpizhai seithana raayin
periyorap pizhai poruththalu marithe

English Translation
It is difficult even for noble men to pardon major crime by small minded men

பாடல் : 33
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீருக்குள் பாசிபோல் வேர்கொள்ளாதே.

விளக்கம்
நூறாண்டுகள் பழகியிருந்தாலும் முரடர்களின் நட்பு நிலைக்காது. அது நீரிலிருக்கும் பாசி போல் வேர் ஊன்றாது

Transliteration
Noorandu pazhkinum moorkar kenmai
neerukul paasipol verkollaathe

English Translation
Like moss on the surface of water, friendship with wicked men, even after hundred years will not take root

பாடல் : 34
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிழக்க வேர் வீழ்க் கும்மே

விளக்கம்
ஒருநாள் பழகியிருந்தாலும் பெரியோரின் நட்பு, நிலத்தைப் பிளந்து செல்லும் வேர் போல ஊன்றிடும்

Transliteration
Orunaal pazhkinum periyor kenmai
irunilam pizhka ver veezhlk kumme

English Translation
Friendship with noble men will be firm like the root that goes deep into the earth

பாடல் : 35
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

விளக்கம்
பிச்சையெடுத்தாவது கல்வி கற்பதே நல்லது

Transliteration
Karkai nantre karkai nantre
pichai pukinum karkai nantre

English Translation
Is is better to get an education even if you have to beg for it

பாடல் : 36
கல்லா ஒருவன் குணநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதராகும்மே

விளக்கம்
கல்வியறிவில்லாத ஒருவன் தன் குலப்பெருமை பேசுவது நெல்லுக்கு நடுவே தோன்றும் குப்பைச் செடி போன்றது.

Transliteration
Kalla oruvan kunanalam pesuthal
nellinum pirantha patharaakume

English Translation
An illiterate man who boasts of his better breed is like a chaff found among paddy

பாடல் : 37
நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயின் கீழிருப் பவனே

விளக்கம்
நான்கு வர்ணங்களில் மேல் வர்ணத்தவனான ஒருவன் கல்லாதவனாக இருந்தால் அவன் கடையனே

Transliteration
Narpaal kulathin merpaa loruvan
katrila naayin keezhirup pavane

English Translation
One belonging to the upper caste, among the four castes, if not learned belongs to the lowest one

பாடல் : 38
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்

விளக்கம்
கற்றவர்கள் எந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களை மற்ற கற்றவர்கள் மேலே வரவேற்று ஏற்றுக் கொள்வார்கள்

Transliteration
yekkudip pirappinum yaavare yaayinum
akkudiyil katrorai melvaruka enpar

English Translation
Whoever one is and whatever class he belongs to, the learned will be received by the class above.

பாடல் : 39
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

விளக்கம்
அறிஞனை அரசனும் விரும்புவான்

Transliteration
Arivudaimai oruvanai arasanum virumpum

English Translation
Even the king will honour the learned.

பாடல் : 40
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்தில்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சமற்று ஏமாந்து இருக்கை நன்றே.

விளக்கம்
பயந்தாங்கொள்ளியான, அறிவில்லாத, உபயோகமற்ற பிள்ளைகளைப் பெறுவதை விட ஒரு குடும்பம் சந்ததியே இல்லாமலிருப்பதே மேல்

Transliteration
Achcham ul adakki arivu agathilaak
kochai makkalaip peruthalin akudi
echamatru yemaanthu irukkai nantre

English Translation
It is better to be disappointed without children than having timid, idiotic misfits as children

பாடல் : 41
யானைக்கு இல்லை தானமும் தருமமும்

விளக்கம்
நீளமான கையிருந்தும் யானை தான, தர்மம் செய்வதில்லை.

Transliteration
Yaanaiku illai thaanamum tharumamum

English Translation
Elephant though has a long trunk does not give to charity

பாடல் : 42
பூனைக்கு இல்லை தவமும் தயையும்

விளக்கம்
கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் பூனை தவமும், தயையும் கொள்வதில்லை

Transliteration
Poonaiku illai thavamum taiyaium

English Translation
Though cats can sit still with eyes closed, it cannot meditate

பாடல் : 43
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்

விளக்கம்
மெய்யறிவுள்ளோர்க்கு இன்ப, துன்பங்களில்லை

Transliteration
Nyaniku illai inbamum thunbamum

English Translation
The saint does not feel pleasures or pain

பாடல் : 44
சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்

விளக்கம்
செல்வத்திலும், சுவடிகளிலுமே இருந்தாலும் கரையானுக்கு அதனால் பணவசதியும், கர்வமுமில்லை. அது இரண்டையுமே அழித்து விடும்

Transliteration
Sithalaiku illai selvamum serukkum

English Translation
The termites do not spare the rich or the proud

பாடல் : 45
முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்

விளக்கம்
ஓட்டமோ, நிலைத்ததோ. முதலைக்கு எல்லா நீரும் ஒன்றுதான். எங்கும் அது மூர்க்கமாகவே இருக்கும்

Transliteration
Muthalaikku illai neeththum nilaium

English Translation
The crocodile has no preference where to swim.. (The wicked do not discern their action)

பாடல் : 46
அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை

விளக்கம்
கல்லார்க்கு எதைப் பற்றியும் பயமோ, வெட்கமோ இல்லை

Transliteration
Achamum naanamum arivilork killai

English Translation
The fools have no fear or shame

பாடல் : 47
நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை

விளக்கம்
வசதியில்லாதவர்க்கு எல்லா நாளும் ஒன்றுதான்

Transliteration
Naalum kizhmaiyum nalinthork killai

English Translation
Those who are weak cannot pick and choose their days or weeks

பாடல் : 48
கேளும் கிளையும் கெட்டோர்க் கில்லை.

விளக்கம்
கெட்டவர்களுக்கு நட்பும், சுற்றமும் இல்லை

Transliteration
Kelum kilaium kettork killai

English Translation
Those who are poor do not have kith or kin

பாடல் : 49
உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா

விளக்கம்
செல்வமும், வறுமையும் ஓரிடத்திலேயே இருக்காது

Transliteration
Udaimaium varumaium oruvali nillaa

English Translation
Wealth and poverty do not stay long

பாடல் : 50
குடைநிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்
நடைமலிந் தோருர் நண்ணினும் நண்ணுவர்

விளக்கம்
யானைமீதமர்ந்து வெண்கொற்றக்குடையின் கீழ் சென்றோரும், பிழைப்புக்காக வேற்றூருக்கு தள்ளாடி நடந்தே செல்ல நேரிடும்.

Transliteration
kudainizhlirunthu kunjara moornthor
nadaimalinth thirur nanninum nannuvar

English Translation
Kings who rode elephants, sitting under the shade may one day walk the streets seeking refuge elsewhere

பாடல் : 51
சிறப்புஞ் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்சாலை அடையினும் அடைவர்.

விளக்கம்
சிறப்பும் செல்வமும் பெருமையும் உள்ளவர்களும் உணவிற்கு தர்ம சத்திரத்தை அடையும் காலம் வரலாம்.

Transliteration
Sirappunj selvamum perumaiyum udaiyor
arakkoozhsaalai adaiyinum adaivar

English Translation
Those who lived with fame, wealth and pride may one day be forced to seek charity for survival

பாடல் : 52
அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோடி ருந்தர சாளினும் ஆளுவர்

விளக்கம்
பிறர் தர்மத்திற்காக இடும் பிச்சையை கேட்டு வாங்கி உண்போரும் அரசராகும் காலம் வரலாம்

Transliteration
Arathidu pichai koovi irappor
arasarodi runthara saalinum aaluvar

English Translation
Even men who begged for their living may one day gain power and sit with the king.

பாடல் : 53
குன்றத் தனைய இருநிதி படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்

விளக்கம்
இரு பெரு மலையளவு செல்வம் உள்ளவர்களும் ஒரே பகலில் அழிந்தாலும் அழிந்து விடுவர்

Transliteration
Kuntrath thanaiya irunithi padaithor
antraip pakale azhinum azhivar

English Translation
Even those with a mountain of wealth could get destroyed within the day

பாடல் : 54
எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குக்
கழுதை மேய்பாழா கினும் ஆகும்

விளக்கம்
ஏழடுக்கு மாட மாளிகையும் அடியோடு சாய்ந்து கழுதை மேயும் பாழ் நிலமானாலும் ஆகும்.

Transliteration
Ezhunilai maadam kaalsaaynth thukkuk
kazhuthai meipaale kinum aagum

English Translation
Even a seven storied palace may one day become a ruin where donkeys graze.

பாடல் : 55
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநக ராயினும் ஆகும்

விளக்கம்
காளை மாடும், கழுதையும் மேய்ந்து கொண்டிருந்த பாழ்நிலமும், பொன் வளையல்கள் அணிந்த மகளிரும், ஆண்களும் கூடி வாழும் நெற்குவியல் மிக்க பெரு நகரமானாலும் ஆகலாம்.

Transliteration
petramum kazhuthaium meintha appaal
potrodi magalirum maintharum serinthu
nerpoli medunaga raayinum aagum

English Translation
The ruin where donkeys and cattle roamed may one day become a prosperous town where food is plenty with the men and women wearing gold and jewels.

பாடல் : 56
மணஅணி அணிந்த மகளி ராங்கே
பிணஅணி அணிந்துதம் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடியாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்

விளக்கம்
கல்யாண ஆடை அணிந்த மகளிரும் அன்றே அதே ஆடை கோடி ஆடையாகி விதவைக் கோலம் பூண்டு, தன் கணவனைத் தழுவி முடிந்த கூந்தலை விரித்து அழுதாலும் அழுவர்.

Transliteration
Manaani anintha magali raange
pinaani aninthutham kozhunaraith thaleei
udutha aadai kodiyaaka
muditha koonthal viripinum viripar

English Translation
The bride with her wedding fineries may next minute hug the body of her dead husband with her hair unmade and be forced to wear funeral attire made of white clothing

பாடல் : 57
இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே

விளக்கம்
இல்லாதவர் பிச்சை கேட்பது இயற்கையே

Transliteration
illor irapathum iyalpe iyalpe

English Translation
It is natural for those who are poor to beg.

பாடல் : 58
இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே.

விளக்கம்
இல்லையென்று பிச்சையெடுப்பவர்க்கு பிச்சையிடுவது செல்வம் உடையவர்க்குக் கடமையே.

Transliteration
Iranthork keevathum udaiyor kadame

English Translation
It is a duty for those owning wealth to give.

பாடல் : 59
நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம இல்லை இல் இல்லோர்க்கே.

விளக்கம்
பூமியும், வானும் அடைந்தாலும் மனையாள் இல்லாதவர் ஒன்றும் இல்லாதவரே

Transliteration
Nalla nyaalamum vaanamum perinum
ellaama illai il illorkke

English Translation
Even the possessions of the whole world and the sky mean nothing if one does not have a good homely life

பாடல் : 60
தறுகண் யானை தான்பெரி தாயினும்
சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே.

விளக்கம்
அச்சமில்லாத பெரிய யானையும், சிறு கணுக்களை உடைய மூங்கில் கோலுக்கு அஞ்சும்

Transliteration
Tharugan yaanai thanperi thaayinum
sirugan moonkeer korkanj summe

English Translation
The elephant though large, still fears the small bamboo stick (held by the mahout)

பாடல் : 61
குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும்
புன்தலைப் புல்வாய் புலிக் கஞ்சும்மே

விளக்கம்
மலைகளோடு கூடிய பெருங்காட்டில் வாழ்ந்தாலும், சிறுதலை உடைய மானானது புலிக்கு அஞ்சும்

Transliteration
Kuntrudai nedunkaadu oode vaazhinum
punthalaip pulvaay pulik kanjume

English Translation
The deer living among the mountainous forest, still fears the tiger. (Even those leading an honest life, fear the wicked)

பாடல் : 62
ஆரையாம் பள்ளத் தூடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே

விளக்கம்
ஆரைப்பூண்டு மிகுந்த பள்ளத்தில் வாழ்ந்தாலும் தேரைக்கு பாம்பென்றால் பயமே

Transliteration
Aaraiyaam pallath thoode vazhinum
therai paampirku mikavanj summe

English Translation
The toad living deep among the bush, still fears the snake (The good people though they avoid the wicked, still fear them)

பாடல் : 63
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்
கடும் புலி வாழும் காடு நன்றே

விளக்கம்
கொடுங்கோல் ஆட்சி செய்யும் நாட்டை விட, கடும் புலி வாழும் காடு நல்லது

Transliteration
Kodunkol mannar vaazhum naatin
kadum puli vaazhum kaadu nantre

English Translation
It is better to live in a forest with a ferocious tiger than living under an unjust king

பாடல் : 64
சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன்தேர் குறவர்த் தேயம் நன்றே.

விளக்கம்
சான்றோர் இல்லாத பழைய ஊரை விட, தேனைத் தேடித் திரியும் குறவர் நாடு நல்லது

Transliteration
Saantror illaath tholpathi iruthalin
thenther kuravarth theyam nantre

English Translation
It is better to live in a forest with primitive men than living in an ancient country that lacks men of virtue

பாடல் : 65
காலையும் மாலையும் நான்மறை யோதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே.

விளக்கம்
இருவேளையும் வேதம் ஓதாத அந்தணர் பதரே

Transliteration
Kaalaium Maalaium naanmarai yothaa
anthanar yenpor anaivarum pathare

English Translation
The priests who do not recite the scriptures both mornings and evenings are useless like chaff

பாடல் : 66
குடியலைந்து இரந்துவெங் கோலொடு நின்ற
முடியுடை இறைவனாம் முர்க்கனும் பதரே

விளக்கம்
இறைவனுக்கு ஒப்பான அரசனும், குடிமக்களை வருத்தி அவர் பொருள் பறித்து கொடுங்கோலாட்சி செய்தால் அந்த மூர்க்கனும் பதரே

Transliteration
Kudilainthu iranthuveng kolodu nintra
mudiudai iraivanaam murkkanum pathare

English Translation
The cruel king who rules in an unjust manner and taxes his subjects heavily too is useless as a chaff

பாடல் : 67
முதலுள பண்டம்கொண்டு வாணிபம்செய்து
அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே.

விளக்கம்
மூலதனம் இருந்தும் அதனால் வாணிபம் செய்து உண்ணாத வணிகரும் பதரே

Transliteration
Muthalula pandamkondu vaanipamseithu
athanpayan unnaa vanikarum pathare

English Translation
The merchant who cannot use his capital to earn a comfortable living is useless as a chaff

பாடல் : 68
வித்தும் ஏரும் யுளவாய் இருப்ப
எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே

விளக்கம்
விதையும், ஏரும் தயாராக இருந்தும், அதனைக் கொண்டு உழவாத சலித்திருக்கும் உழவனும் பதரே

Transliteration
Vithum yerum yulavaay iruppa
eyththang kirukum yelaiyum pathare

English Translation
The one who chooses not to use the seeds and plough he has but sits idle is akin to the chaffs among the paddy

பாடல் : 69
தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்
பின்பவள் பாராப் பேதையும் பதரே

விளக்கம்
மனைவியை அவள் தாய் வீட்டுக்குத் துரத்தி விட்டு, திரும்பியும் பார்க்காத மடையனும் பதரே

Transliteration
Thanmanai yaalaith thaaymanaik kakatrip
pinpaval paaraap pethaiyum pathare

English Translation
The man who sends his wife to her mother’s home then ignores her too is useless as a chaff

பாடல் : 70
தன்மனை யாளைத் தனிமனை யிருத்தி
பிறமனைக் கேகும் பேதையும் பதரே

விளக்கம்
மனைவியைத் தனியே வீட்டில் விட்டு விட்டு, அடுத்தவளைத் தேடும் மடையனும் பதரே

Transliteration
Thanmanai yalait tanimanai yirutthi
pirmanaik kekum pethaiyum pathare

English Translation
The man who leaves his wife at home and seeks the wife of another is also a chaff

பாடல் : 71
தன்னா யுதமும் தன்கைப் பொருளும்
பிறன்கைக் கொடுக்கும் பேதையும் பதரே

விளக்கம்
தொழிலுக்கு வேண்டிய தன் கருவியையும், தன் செல்வத்தையும் அடுத்தவனிடம் கொடுக்கும் மடையனும் பதரே

Transliteration
Thannaa yuthamum thankai porulum
pirankaik kotukkum pethaiyum pathare

English Translation
The one who lends his tools and other implements to others and goes about doing nothing is a chaff too

பாடல் : 72
வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவது ஒன்றைக் போற்றிக் கேண்மின்

விளக்கம்
வாயையே பறையாகவும், நாக்கை அடிக்கும் கோலாகவும் கொண்டு அறிவுரை கூறும் சான்றோர் கூற்றைப் போற்றி கேட்க வேண்டும்

Transliteration
Vaypparai yakavum nakkatip pakavum
saatruvatu onraik porrik kenmin

English Translation
Learn from the words of the wise who use their mouth as a drum and the tongue as a beating stick

பாடல் : 73
பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே

விளக்கம்
சொல் வன்மையுடைய ஒருவன் சொல்லும் பொய்யும் மெய் போலவே தோன்றும்

Transliteration
Poyyutai yoruvan colvanmaiyinal
meypo lummae meypo lummae

English Translation
A habitual liar could make his lies seem like the truth.

பாடல் : 74
மெய்யுடை ஒருவன் சொல்லாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே

விளக்கம்
பேச்சுத் திறமையில்லாத ஒருவன் சொல்லும் மெய்யும் பொய் போலவே தோன்றும்

Transliteration
Meyyutai oruvan sollaat taamaiyal
poypo lummae poypo lummae

English Translation
One without conviction, though he tells the truth makes it seem a lie

பாடல் : 75
இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையா ராயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே

விளக்கம்
இருதரப்பினர் கூறுவதையும் பலமுறைக் கேட்டும், இருவரும் ஒப்ப நீதி கூறாவிடில், வழக்கில் தோல்வியுற்றவர் மனமாற அழும் கண்ணீர் நீதி உரைப்பவர் தலைமுறைகளையும் மும்மூர்த்திகளும் முறையாகக் காத்தாலும் அழித்துவிடும்

Transliteration
Iruvar sollaiyum elutharam kette
iruvarum poruntha uraiyaa raayin
Manumurai neriyin valakkizhanth tavarthaam
manamurra marukinin razhutha kanniir
Muraiyurath tevar muuvar kakkinum
valivali iirvator vaalaakummae

English Translation
A judge should listen several times to the litigants on both sides and deliver an impartial verdict. If he fails to do that then the tears shed by the litigant who thinks he was wronged will become the sword that hangs over the judge for generations, even if the Gods stand guard above him

பாடல் : 76
பழியா வருவது மொழியா தொழிவது

விளக்கம்
நமக்குப் பழிவரும் எந்த சொல்லையும் சொல்லாது விட்டொழிக்க வேண்டும்

Transliteration
Pazhiyaa varuvathu mozhiyaa tholivathu

English Translation
Do not utter words, those will bring blame later

பாடல் : 77
சுழியா வருபுனல் இழியா தொழிவது

விளக்கம்
சுழலாக வரும் நீர் வெள்ளத்தில் இறங்கக் கூடாது

Transliteration
suzhiyaa varupunal izhiyaa tholivathu

English Translation
Do not enter into a swirling flood

பாடல் : 78
துணையோ டல்லது நெடுவழி போகேல்

விளக்கம்
தனியாகத் தொலைதூரப் பயணம் செய்யக் கூடாது.

Transliteration
Tunaiyo tallathu netuvali pokael

English Translation
Do not venture on a long journey without an assistant.

பாடல் : 79
புணை மீதல்லது நெடும்புன லேகேல்

விளக்கம்
தெப்பத்தின் மேல் செல்லாமல், நீண்ட பெரும் நீரோட்டத்தில் நீந்தக் கூடாது.

Transliteration
Punai miithallathu netumpuna lekel

English Translation
Do not cross a large water course without a float

பாடல் : 80
எழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலா தனகொடு முயல்வதா காதே

விளக்கம்
அழகான தனங்களையும், மை தீட்டிய கண்களையும் கொண்ட மாதர் தந்திரங்களில் மயங்கித் தகாத கொடுங்கார்யங்களில் இறங்கக் கூடாது

Transliteration
Elilar mulaivari viziyar tantiram
iyalaa tanakotu muyalvathaa kaathe

English Translation
Do not be charmed by pretty women to carry out disrespectful tasks

பாடல் : 81
வழியே ஏகுக வழியே மீளுக

விளக்கம்
நல்ல நேர்மையான வழியிலேயே சென்று, வர வேண்டும்

Transliteration
Valiye ekuka valiye miiluka

English Translation
Take the path of truth and come back the same way

பாடல் : 82
இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே

விளக்கம்
இவையே உலகில் நடந்து கொள்ளும் முறை

Transliteration
Ivaikaan ulakirku iyalam aare

English Translation
The above are words of wisdom that will benefit the world

 
Top