தமிழ் இலக்கியம்

குழந்தைகளுக்கான பாடல்கள்

தமிழில் சிறுவர் சிறுமியர் பாடி மகிழ ஓசை, இசை, விளையாட்டு, கல்வி ஆகியவற்றை முதற்பொருளாய் கொண்ட எண்ணற்ற பாடல்கள் உள்ளன. பிறமொழி ஆதிக்கத்தால் மறைந்து வரும் தமிழ் குழந்தைபாடல்களை இங்கு தொகுத்து வழங்கி உள்ளோம்.

இப்பாடல்களை பாடுவதின் முலம் குழந்தைகளின் மொழித்திறனும், அறிவும் வளரும்.

இவை பொதுவாக வாய்வழிக் கலையுருக்களாக வளர்ந்தவையாகும். அதனாலேயே ஒரே பாடலுக்கு பல்வேறு திரிபுகள் இருக்ககூடும்.

More Details
 

சிலப்பதிகாரம் - இளங்கோ அடிகள்

சிலப்பதிகாரம் கோவலனை பாட்டுடைத் தலைவனாய் கொண்ட நூல். சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகும்.சிலம்பால் விளைந்த கதை ஆதலால் இப்பெயர் பெற்றது.இதனை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார்.இவர் சேரன் செங்குட்டுவன் சகோதரர் ஆவார். இந்நூல் பாட்டையிட்ட தொடர்நிலைச் செய்யுள் என்றும் குடிமக்கள் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்நூல் இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட நூல் ஆகும். இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம்.

View சிலப்பதிகாரம் Onbook
 

மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார்

மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகும்.இதன் காப்பியத்தலைவி மணிமேகலை.கோவலன்,மாதவியின் மகளாவாள். சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

View மணிமேகலை Onbook
 

குண்டலகேசி - நாதகுத்தனார்

குண்டலகேசி ஒரு பெளத்த சமயம் சார்ந்த நூலாகும்.இதன் முழுப் பாடல்களும் கிடைக்கப் பெறவில்லை.இது ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.இதுவரை பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. குண்டலகேசி என்னும் வணிகர் குலப்பெண் தன்னைக் கொல்ல வந்த கணவனை கொன்றுவிட்டு பெளத்தமத துறவி ஆகி அந்த மதத்தின் சிறப்புகளை பரப்புவதில் ஈடுபட்டார்.இக்கதையே குண்டலகேசியின் கதையாக கருதப்படுகிறது.

View குண்டலகேசி Onbook
 

வளையாபதி

வளையாபதி சமண சமயம் சார்ந்த நூலாகும்.இதை இயற்றியவர் யார் என்று அறியப்படவில்லை. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.இந்நூலுக்கு உரிய எழுபத்திரண்டு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இதுதான் என்று கூற இயலவில்லை. வளையாபதி ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகும்.

View வளையாபதி Onbook
 

உதயண குமார காவியம்

சதானிகன் என்னும் வத்தவ நாட்டரசனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை கூறுவதால் இது உதயணகுமார காவியம் என்று பெயர்பெற்றது.இந்நூல் ஆறு காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது .இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொள்கிறான்.இது ஒரு சமணப்பெண் துறவியால் இயற்றப்பட்டது.ஆனால் அவர் பெயர் இன்னது என அறியப்படவில்லை.இந்நூலில் சிறிதும் காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ இல்லை.

View உதயண குமார காவியம் Onbook
 

நாக குமார காவியம்

நாககுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்கள் ஒன்றாகும் .இந்நூலை இயற்றியவர் பெயர் அறியப்படவில்லை.இந்நூல் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் .இந்நூல் சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.இதன் காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு ஆகும்

View நாக குமார காவியம் Onbook
 

நற்றிணை

நல் என்னும் அடைமொழி பெற்று,அகத்திணை பற்றிய நூல் ஆதலின் நற்றிணை என பெயர் பெற்றது. நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். நற்றிணை ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரெண்டு அடி பேரெல்லையும் உடையது.நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி.இதை தொகுத்தவர் பெயர் அறியப்படவில்லை தொகுபித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
நற்றிணை அக்கால சமுக மக்களின் வாழ்க்கை,மன்னனின் கொடைத்திறம், ஆட்சிசிறப்பு,நம்பிக்கை,சடங்கு ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.

View நற்றிணை Onbook
 

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு ஐந்து திணைகளை பற்றிய அகப்பொருள் நூலாகும்.திணைக்கு நூறாக இந்நூலில் ஐநூறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.இவை மூன்று முதல் ஆறு வரிகளை கொண்டிருக்கும் .இவ்வாறு குறுகிய வரிகளை கொண்டு இயற்றப்பட்ட நூல் ஆதலின் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது,ஒவ்வொரு தினைப் பாடல்களும் ஒவ்வொரு புலவரால் பாடப்பெற்றவை. ஓரம்போகியார் மருதத் திணைப் பாடல்களையும், அம்மூவனார் நெய்தல் திணைப் பாடல்களையும், கபிலர் குறிஞ்சித் திணைப் பாடல்களையும், ஓதலாந்தையார் பாலைத் திணைப் பாடல்களையும், பேயனார் முல்லைத் திணைப் பாடல்களையும் இயற்றியுள்ளனர்.

ஐங்குறுநூறை தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்..

View ஐங்குறுநூறு Onbook
 

அகநானூறு

அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களை கொண்ட நூல் ஆதலின் அகநானூறு எனப் பெயர் பெற்றது.இது வெவ்வேறு காலங்களில் பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூலில் பதிமுன்று முதல் முப்பத்தி ஒன்று அடிகளை கொண்ட பாடல்கள் வரை இடம்பெற்றுள்ளன.நீண்ட பாடல்களை கொண்ட அகப்பொருள் நூல் ஆதலின் இது நெடுந்தொகை என்றும் வழங்கப்பெறும்.
அகநானூற்றை தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். அகநானூற்றை தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார் ஆவார்.

View அகநானூறு Onbook
 
 
Top