மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறிவுரைகளுடன் புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி/Puthiya Aathichudi

ககர வருக்கம/Kagara Varukkam

13  கற்ற தொழுகு

விளக்கம்
(நீ) கற்றதைப் பின்பற்று.

Transliteration
Katradhu ozhugu.

English Translation
Practice the good you have learnt.

14  காலம் அழியேல்

விளக்கம்
காலத்தை வீணாக்காதே.

Transliteration
Kaalam azhiyel.

English Translation
Don't waste your time.

15  கிளைபல தாங்கேல்

விளக்கம்
எவ்வகைப் பிரிவையும் சகிக்காதே.

Transliteration
Kilai pala thaangel.

English Translation
Don't tolerate the partition of any kind.

16  கீழோர்க்கு அஞ்சேல்

விளக்கம்
கீழான எண்ணம் உடையோரிடம் பயம் கொள்ளாதே.

Transliteration
Keezhorkku anjel.

English Translation
Do not fear those people with mean behaviour.

17  குன்றேன நிமிர்ந்து நில்

விளக்கம்
மலை போல் நிமிர்ந்து நில்.

Transliteration
Kunrena nimirndhu nil.

English Translation
Stand unmoved like a mountain.

18  கூடித் தொழில் செய்

விளக்கம்
கூடித் தொழில் செய்தல் நன்மையாகும்.

Transliteration
Koodi thozhil sei.

English Translation
Form groups in doing work.

19  கெடுப்பது சோர்வு

விளக்கம்
பிறர்க்கு தீங்கிழைப்பது இழுக்கு.

Transliteration
Keduppadhu sorvu.

English Translation
Causing harm to others is wrong.

20  கேட்டிலும் துணிந்து நில்

விளக்கம்
வறுமையிலும், நஷ்டத்திலும், அழிவிலும், தைரியமாக இரு.

Transliteration
Kettilum thunindhu nil.

English Translation
Stand tall even at the time of adversities.(ruin, poverty, loss)

21  கைத்தொழில் போற்று

விளக்கம்
கைத்தொழிலை பாதுகாப்பு செய், போற்று, விரும்பு.

Transliteration
Kai thozhil potru.

English Translation
Like, protect and praise cottage (industry)

22  கொடுமையை எதிர்த்து நில்

விளக்கம்
தீமை, க்ரூரம், அநீதி, மனக் கோணலை எதிர்த்து நில்.

Transliteration
Kodumaiyai edhirththu nil.

English Translation
Stand against evil, injustice, cruelty and crookedness.

23  கோல்கைக் கொண்டு வாழ்

விளக்கம்
பார பட்சத்தொடு இருக்காதே.

Transliteration
Kol kai kondu vaazh.

English Translation
Maintain justice.

24  கவ்வியதை விடேல்

விளக்கம்
நல்லனவற்றை உன் பிடியில் இருந்து விட்டு விடாதே.

Transliteration
Kavviyadhai videl.

English Translation
Never let go off the ones(good things) from your grasp.

 
Top