குழந்தைகளுக்கான பாடல்கள்/children Rhymes

பூங்கா/Poongaa

பாடல்
பூங்காவுக்குப் போகலாம்
பொழுதை நன்கு போக்கலாம்

இனிய காற்று வாங்கலாம்
இன்பம் பெற்றுச் செல்லலாம்

கவலை எல்லாம் மறக்கலாம்
கற்பனையில் மிதக்கலாம்

ஆசை தீர பேசலாம்
அழகு பூக்கள் ரசிக்கலாம்

பசுமை விருந்து பருகலாம்
அருமையாக ஓடலாம்

Transliteration
Poongaavuku poagalam
poluthai nangu poakkalam

iniya kaatru vaangalam
inbam petruch sellalam

kavalai yellam marakalam
karpanaiyil mithakalam

aasai theera pesalam
azhagu pookal rasikalam

pasumai virunthu parugalam
arumaiyaaga odalam

பாடல்
ஊரில் உள்ள பூங்கா
ஊ…ஞ்சல் உள்ள பூங்கா

ஒன்றாய் கூட பூங்கா
ஓடி ஆட பூங்கா

பூத்து குலுங்க பூங்கா
பூமியெல்லாம் பூங்கா

சீசா உள்ள பூங்கா
சீக்கிரம் போலாம் பூங்கா

சுற்றி ஆட பூங்கா
சும்மா போலாம் பூங்கா

வீதிக்கொரு பூங்கா
வேனும்மம்மா பூங்கா

Transliteration
Ooril ulla poongaa
oonjal ulla poongaa

ontraai kooda poongaa
oadi aada poongaa

poothu kulunga poongaa
poomiyellam poongaa

seesaa ulla poongaa
seekiram poalam poongaa

sutri aada poongaa
summa poalam poongaa

veethikkoru poongaa
venumamma poongaa

 
Top