பாரதியார் கவிதைகள்/Bharathiyar Kavithaigal

சித்தாந்தச் சாமி கோயில்/Siththanthach Saami Koyil

பாடல் 1
சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளி யுண்டாம்;-பெண்ணே!
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்டதிருச் சுடராம்;-பெண்ணே!

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஒட்டவருஞ் சுடராம்;-பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!

தோன்று முயிர்கள் அனைத்டும்நன் றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்;-பெண்ணே!
மூன்று வகைப்படும் காலநன் றென்பதை
முன்ன ரிடுஞ் சுடராம்;-பெண்ணே!

பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்
பார்க்க வொளிர்ச்சுடராம்-பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக்
காண வொளிர்ச் சுடராம்;-பெண்ணே!

Transliteration
Siththanthach saami thirukkoyil vaayilil
theebavoli yundaam;-penne!
muththaantha veethi muzhuthaiyung kaattida
moondathiruch chudaraam;-penne!

Ullath thazhukkum udalir kuraigalum
ottavarunj chudaraam;-penne!
kallath thanangal anaithum velippadak
Kaata varunj chudaraam;-penne!

Thondru muyirgal anaithidumnan drenpathu
thotra murunj chudaraam;-penne!
moondru vagaipadum kaala nan drenpathai
munna ridunj chudaraam;-penne!

pattinanth thannilum paakkanan drenpathaip
paarkka volirchchudaraam- penne!
kattu manaiyilung koyilnan drepathaik
kaana volirch chudaraam;-penne!

 
Top