மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறிவுரைகளுடன் புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி/Puthiya Aathichudi

உயிர் வருக்கம்/Uyir Varukkam

1  அச்சம் தவிர்

விளக்கம்
பயம் கொள்ளாதே.

Transliteration
Achcham thavir.

English Translation
Remove fear.

2  ஆண்மை தவறேல்

விளக்கம்
(மன)வலிமை இழக்காதே.

Transliteration
Aanmai thavarel.

English Translation
Do not lose your strength of mind (to bear pain with courage)

3  இளைத்தல் இகழ்ச்சி

விளக்கம்
சோர்வடைதல், பின்னடைதல் இகழ்வதற்கு உரியது.

Transliteration
Ilaiththal igazhchi.

English Translation
To lag behind (an enemy), to yield in a fight, to grow tired...all these are to be condemned.

4  ஈகை திறன்

விளக்கம்
பிறர்க்கு கொடுத்தலை மனதில் கொள்.

Transliteration
Eegai thiran.

English Translation
Have the mind to help others.

5  உடலினை உறுதி செய்

விளக்கம்
உடம்பை திடமாக வைத்துக் கொள்.

Transliteration
Udalinai urudhi sei.

English Translation
Strengthen your body.

6  ஊண்மிக விரும்பு

விளக்கம்
உணவு உண்ண விருப்பம் கொள்.

Transliteration
Oonmiga virumbhu.

English Translation
Have the desire to eat.

7  எண்ணுவது உயர்வு

விளக்கம்
எண்ணம் உயர்வாக இருக்கவேண்டும்.

Transliteration
Ennuvadhu uyarvu.

English Translation
Have a high thinking.

8  ஏறு போல் நட

விளக்கம்
எருது போல் மிடுக்காக நட..(நிமிர்ந்து செல் )

Transliteration
Yerupol nada.

English Translation
Walk with pride.

9  ஐம்பொறி ஆட்சி கொள்

விளக்கம்
ஐம் புலனையும் அடக்கி ஆள்.

Transliteration
Aimpori aatchi kol.

English Translation
Control your five senses.

10  ஒற்றுமை வலியமாம்

விளக்கம்
ஒற்றுமையே வலிமையாகும்.

Transliteration
Otrumai valiyamaam.

English Translation
Unity is strength.

11  ஓய்தல் ஒழி

விளக்கம்
(மனமும், உடம்பும் )தளராதே.

Transliteration
Oidhal ozhi.

English Translation
Do not lose courage.

12  ஔடதம் குறை

விளக்கம்
மருந்தை (நாடுவதைக்) குறை.

Transliteration
Awdadham kurai.

English Translation
Let the medications be to the minimum.

 
Top