மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறிவுரைகளுடன் புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி/Puthiya Aathichudi

நகர வருக்கம்/Thagara Varukkam

42  தன்மை இழவேல்

விளக்கம்
உன் இயல்பையும், பெருமையையும், (நல்ல) குணத்தையும், அழித்துக் கொள்ளாதே.

Transliteration
Thanmai izhavel.

English Translation
Do not let loose (destroy) your natural abilites, your greatness and (good) character.

43  தாழ்ந்து நடவேல்

விளக்கம்
(யாருக்கும்) தாழ்ந்து போகாதே...அடிமையாக இராதே.

Transliteration
Thaazhndhu nadavel.

English Translation
Do not be a slave to others.

44  திருவினை வென்று வாழ்

விளக்கம்
பலனை (எதிர்ப் பார்க்காமல்) வென்று வாழ்..(எனக்கு தோன்றியது...திருவினை- பலன் (கீதையில் கூறியதைப் போல்...உன் கடமைகளை ஆற்று..பலனை எதிர்ப் பார்க்காதே) போல் இருக்கிறது அல்லவா!

Transliteration
Thiruvinai venru vaazh.

English Translation
Do not expect (favourable) results for your actions. Come out of that mentality and perform your duties.

45  தீயோர்க்கு அஞ்சேல்

விளக்கம்
தீய குணம் உடையவர்களிடம் அச்சம் கொள்ளாதே..எதிர்த்து நில்.

Transliteration
Theeyorkku anjel.

English Translation
Stand against evil (doers).

46  துன்பம் மறந்திடு

விளக்கம்
கடந்த, நிகழ் கால துன்பத்தை மற..முன்னேறு.

Transliteration
Thunbam marandhidu.

English Translation
Forget your sufferings and go ahead.

47  தூற்றுதல் ஒழி

விளக்கம்
ஒருவரையும் பழிக்காதே.

Transliteration
Thootrudhal ozhi.

English Translation
Do not slander anyone.

48  தெய்வம் நீ என்று உணர்

விளக்கம்
உன்னிடமும் தெய்வ குணங்கள் உண்டு என்று தெரிந்து கொள்.

Transliteration
Deivam nee enru unar.

English Translation
Acknowledge that you too possess Godly qualities.

49  தேசத்தைக் காத்தல் செய்

விளக்கம்
தேச பக்தனாக இருந்து நாட்டை (தீய சக்திகளிடம் இருந்து) காப்பாற்று.

Transliteration
Desaththai kaaththal sei.

English Translation
Love one's country and protect it from evil-doers.

50  தையலை உயர்வு செய்

விளக்கம்
பெண்ணை, பெண் இனத்தை கௌரவப்படுத்து.

Transliteration
Thaiyalai uyarvu sei.

English Translation
Honour women.

51  தொன்மைக்கு அஞ்சேல்

விளக்கம்
பழமைக் (பழமையானமூட நம்பிக்கைகளைக் )கண்டு பயந்து பின்பற்றாதே.

Transliteration
Thonmaikku anjel.

English Translation
Do not follow the old principles if they do not have any logical base.

52  தோல்வியிற் கலங்கேல்

விளக்கம்
தோல்வி கண்டு மனம் குழம்பாதே, மயங்காதே, அச்சமுராதே, தவறுதல் செய்யாதே.

Transliteration
Tholviyir kalangel.

English Translation
Do not get confused, feared or commit any mistakes on the event of failures.

53  தவத்தினை நிதம் புரி

விளக்கம்
நல்ல பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்று.

Transliteration
Thavathinai nidham puri.

English Translation
Follow good deeds every day.

 
Top