மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறிவுரைகளுடன் புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி/Puthiya Aathichudi

பகர வருக்கம்/Pagara Varukkam

65  பணத்தினைப் பெருக்கு

விளக்கம்
பணத்தினைப் பெருக்கி, (வேண்டுவோர்க்கு உதவி செய்).

Transliteration
Panathinai perukku.

English Translation
Expand your wealth (to serve the needy).

66  பாட்டினில் அன்புசெய்

விளக்கம்
இசையினால் பக்தி செய்.. இசையே உலக மொழியாம்..எல்லோரும் அறியும் மொழியும் அதுவே.

Transliteration
Paatinil anbu sei.

English Translation
Perform devotion through music..it is an universal language understood by all with no exception of the Divine.

67  பிணத்தினைப் போற்றேல்

விளக்கம்
மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களை, துதி செய்யாதே.

Transliteration
Pinathinai potrel.

English Translation
Do not praise or encourage those people, who have no regards to other's feelings.

68  பீழைக்கு இடம் கொடேல்

விளக்கம்
துன்பத்திற்கு இடம் கொடுக்காதே.

Transliteration
Peezhaikku idam kodel.

English Translation
Do not give room for misery.

69  புதியன விரும்பு

விளக்கம்
புதிய நன்மை தரும் மாற்றங்களை விரும்பு.

Transliteration
Pudhiyana virumbhu.

English Translation
Like, new changes, which would uplift the society.

70  பூமி இழந்திடேல்

விளக்கம்
நம் சொந்த பூமியை, நாட்டை இழந்து, அடிமையாக இராதே.

Transliteration
Bhoomi izhandhidel.

English Translation
Don't be a slave by losing your property or your country.

71  பெரிதினும் பெரிது கேள்

விளக்கம்
நாம் பெரிதாக எண்ணும் இந்த பூவுலக சொத்துக்களை விட்டு, இதை விட பெரிதென இருக்கும் அந்த பேரின்பச் சொத்தை கேள், நாடு.

Transliteration
Peridhinum peridhu kel.

English Translation
Seek that treasure which is greater than what we think of treasure in this materialistic world.

72  பேய்களுக்கு அஞ்சேல்

விளக்கம்
பேய் போல் வெறி குணம் உள்ள மனிதர்களுக்கு அஞ்சாதே.

Transliteration
Peigalukku anjel.

English Translation
Do not fear those people who act in a madness state.

73  பொய்ம்மை இகழ்

விளக்கம்
உண்மை போல் தோற்றம் அளிக்கும், வேஷம் போடும் மனிதர்களை, நிந்தை செய்.

Transliteration
Poimmai igazh.

English Translation
Despise those who act differently inside and out.

74  போர்த்தொழில் பழகு

விளக்கம்
போரிட தெரிந்து கொள், தற்காப்பு தெரிந்து கொள்.

Transliteration
Porthozhil pazhagu.

English Translation
Learn self-defense.

 
Top