மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறிவுரைகளுடன் புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி/Puthiya Aathichudi

நகர வருக்கம்/Nagara Varukkam

54  நன்று கருது

விளக்கம்
நல்லனவற்றை செய்ய எண்ணு; விரும்பு.

Transliteration
Nanru karudhu.

English Translation
Intend and also desire to do good deeds.

55  நாளெல்லாம் வினை செய்

விளக்கம்
சுறுசுறுப்பாக இரு..சோம்பி இராதே.

Transliteration
Naalellaam vinai sei.

English Translation
Be active.

56  நினைப்பது முடியும்

விளக்கம்
நம்பிக்கையோடு இரு.

Transliteration
Ninaippadhu mudiyum.

English Translation
Have a positive outlook.

57  நீதி நூல் பயில்

விளக்கம்
நீதி நூல் படித்து, நியாயம் ஒழுக்கத்தோடு, மற்றவர்க்கு நல்ல வழிகாட்டியாகவும் இரு.

Transliteration
Needhi nool payil.

English Translation
Study law to lead a life of justice to others, maintaining one's morality and guiding others to attain the same.

58  நுனி அளவு செல்

விளக்கம்
எதனையும் கூர்ந்து பார்த்து நட. முன்னெச்சரிக்கையோடு இரு.

Transliteration
Nuni alavu sel.

English Translation
Be cautious always.

59  நூலினை பகுத்துணர்

விளக்கம்
படிக்கும் நூல்களை ஆராய்ந்து அறிந்து கொள்.

Transliteration
Noolinai paguththu unar.

English Translation
Analyse what you read.

60  நெற்றி சுருக்கிடேல்

விளக்கம்
(அனாவசிய) எரிச்சலும் கோபமும் கொள்ளாதே.

Transliteration
Netri surukkidel.

English Translation
Don't get irritated or angry, unnecessarily.

61  நேர்படப் பேசு

விளக்கம்
சுற்றி வளைத்து பேசாமல், நேரடியாகப் பேசு.

Transliteration
Nerpada pesu.

English Translation
Don't beat round the bush.

62  நையப் புடை

விளக்கம்
இதற்கு..அடித்து நொறுக்கு என்ற அர்த்தம் தான் முதலில் தோன்றும்...ஆனால், எதை அடிப்பது..தெரியவில்லை.. அது கேடு விளைவிக்கும் எண்ணமாகவும் இருக்கலாம், பிறர்க்கு தீங்கு செய்யும் செயலாகவும் இருக்கலாம்.. கெட்டதை புடைத்துத் தள்ளி, நல்லனவற்றை தக்க வைத்துக் கொள் என்றும் இருக்கலாம்.

Transliteration
Naiyya pudai.

English Translation
It might be get rid of evil thoughts and actions and retain those good morals which would guide us in the right direction.

63  நொந்தது சாகும்

விளக்கம்
மனச் சோர்வு கொல்லும்

Transliteration
Nondhadhu saagum.

English Translation
Depression kills people.

64  நோற்பது கைவிடேல்

விளக்கம்
விரதத்தைக் (மதம் சார்ந்ததோ, அல்லது ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதோ) கை விடேல்.

Transliteration
Norppadhu kaividel.

English Translation
Never lose endurance

 
Top