ஒளவையார் அருளிச்செய்த ஆத்திசூடி

ஆத்திச்சூடி/Aathichudi

சகர வருக்கம்/Sagara Varukkam

சக்கர நெறி நில்

44  சக்கர நெறி நில்

விளக்கம்
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )

Transliteration
Sakkara Neri Nil

English Translation
Honor your Lands Constitution.

சான்றோர் இனத்து இரு.

45  சான்றோர் இனத்து இரு.

விளக்கம்
அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

Transliteration
Sandrol Inathu Iru

English Translation
Associate with the noble.

சித்திரம் பேசேல்

46  சித்திரம் பேசேல்

விளக்கம்
பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே

Transliteration
Sithiram Pesael

English Translation
Stop being paradoxical.

சீர்மை மறவேல்

47  சீர்மை மறவேல்

விளக்கம்
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

Transliteration
Seermai Maravel

English Translation
Remember to be righteous.

சுளிக்கச் சொல்லேல்

48  சுளிக்கச் சொல்லேல்

விளக்கம்
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்

Transliteration
Sulikka Sollel

English Translation
Don't hurt others feelings.

சூது விரும்பேல்

49  சூது விரும்பேல்

விளக்கம்
ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

Transliteration
Soodhu Virumbel

English Translation
Don't gamble.

செய்வன திருந்தச் செய்

50  செய்வன திருந்தச் செய்

விளக்கம்
செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்

Transliteration
Seivana Thirundha Sei

English Translation
Action with perfection.

சேரிடம் அறிந்து சேர்.

51  சேரிடம் அறிந்து சேர்.

விளக்கம்
நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

Transliteration
Seridam Arinthu Saer

English Translation
Seek out good friends.

சையெனத் திரியேல்

52  சையெனத் திரியேல்

விளக்கம்
பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

Transliteration
Saiyenath Thiriyel.

English Translation
Avoid being insulted.

சொற்சோர்வு படேல்

53  சொற்சோர்வு படேல்

விளக்கம்
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

Transliteration
Sor Sorvu Padel

English Translation
Don't show fatigue in conversation.

சோம்பித் திரியேல்

54  சோம்பித் திரியேல்

விளக்கம்
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

Transliteration
Sombi Thiriyel

English Translation
Don't be a lazybones.

 
Top