ஒளவையார் அருளிச்செய்த ஆத்திசூடி

ஆத்திச்சூடி/Aathichudi

பகர வருக்கம்/Pagara Varukkam

பழிப்பன பகரேல்

77  பழிப்பன பகரேல்

விளக்கம்
பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.

Transliteration
Pazhippena Pagarel

English Translation
Speak no vulgarity.

பாம்பொடு பழகேல்

78  பாம்பொடு பழகேல்

விளக்கம்
பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

Transliteration
Pambodu Pazhagel

English Translation
Keep away from the vicious.

பிழைபடச் சொல்லேல்

79  பிழைபடச் சொல்லேல்

விளக்கம்
குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

Transliteration
Pizhaipada Sollel

English Translation
Watch out for self incrimination.

பீடு பெறநில்

80  பீடு பெறநில்

விளக்கம்
பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்

Transliteration
Peedu Pera Nil

English Translation
Follow path of honor.

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

81  புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

விளக்கம்
உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்

Transliteration
Pugazhdhaarai Potri Vazh

English Translation
Protect your benefactor.

பூமி திருத்தியுண்

82  பூமி திருத்தியுண்

விளக்கம்
விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்

Transliteration
Boomi Thiruthi Unn

English Translation
Cultivate the land and feed.

பெரியாரைத் துணைக்கொள்

83  பெரியாரைத் துணைக்கொள்

விளக்கம்
அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

Transliteration
Periyarai Thunai Kol

English Translation
Seek help from the old and wise.

பேதைமை யகற்று

84  பேதைமை யகற்று

விளக்கம்
அறியாமையைப் போக்கு

Transliteration
Pethamai Agatru

English Translation
Eradicate ignorance.

பையலோ டிணங்கேல்

85  பையலோ டிணங்கேல்

விளக்கம்
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

Transliteration
Payalodu Inangel

English Translation
Don't comply with idiots.

பொருடனைப் போற்றிவாழ்

86  பொருடனைப் போற்றிவாழ்

விளக்கம்
பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

Transliteration
Porulthanai Potri Vazh

English Translation
Protect and enhance your wealth.

போர்த்தொழில் புரியேல்

87  போர்த்தொழில் புரியேல்

விளக்கம்
யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே

Transliteration
Porth Thozhil Puriyel

English Translation
Don't encourage war.

 
Top