ஒளவையார் அருளிச்செய்த ஆத்திசூடி

ஆத்திச்சூடி/Aathichudi

மகர வருக்கம்/Magara Varukkam

மனந்தடு மாறேல்

88  மனந்தடு மாறேல்

விளக்கம்
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

Transliteration
Manam Thadumarel

English Translation
Don't vacillate.

மாற்றானுக் கிடங்கொடேல்

89  மாற்றானுக் கிடங்கொடேல்

விளக்கம்
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

Transliteration
Matranukku Idam Kodel

English Translation
Don't accommodate your enemy.

மிகைபடச் சொல்லேல்

90  மிகைபடச் சொல்லேல்

விளக்கம்
சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

Transliteration
Migaipada Sollel

English Translation
Don't over dramatize.

மீதூண் விரும்பேல்

91  மீதூண் விரும்பேல்

விளக்கம்
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

Transliteration
Meethoon Virumbel

English Translation
Don't be a glutton.

முனைமுகத்து நில்லேல்

92  முனைமுகத்து நில்லேல்

விளக்கம்
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே

Transliteration
Munaimugathu Nillel

English Translation
Don't join an unjust fight.

மூர்க்கரோ டிணங்கேல்

93  மூர்க்கரோ டிணங்கேல்

விளக்கம்
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

Transliteration
Moorkarodu Inangel

English Translation
Don't agree with the stubborn.

மெல்லினல்லாள் தோள்சேர்

94  மெல்லினல்லாள் தோள்சேர்

விளக்கம்
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

Transliteration
Melli Nallaal Tholeser

English Translation
Stick with your exemplary wife.

மேன்மக்கள் சொற்கேள்

95  மேன்மக்கள் சொற்கேள்

விளக்கம்
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

Transliteration
Menmakkam Sol Kel

English Translation
Listen to men of quality.

மைவிழியார் மனையகல்

96  மைவிழியார் மனையகல்

விளக்கம்
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

Transliteration
Mai Vizhiyor Manai Agal

English Translation
Dissociate from the jealous.

மொழிவ தறமொழி

97  மொழிவ தறமொழி

விளக்கம்
சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்

Transliteration
Mozhivathu Ara Mozhi

English Translation
Speak with clarity.

மோகத்தை முனி

98  மோகத்தை முனி

விளக்கம்
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

Transliteration
Mogathai Muni

English Translation
Hate any desire for lust.

 
Top