ஒளவையார் அருளிச்செய்த ஆத்திசூடி

ஆத்திச்சூடி/Aathichudi

ககர வருக்கம்/Kagara Varukkam

கடிவது மற

32  கடிவது மற

விளக்கம்
யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

Transliteration
Kadivathu Mara

English Translation
Constant anger is corrosive.

காப்பது விரதம்

33  காப்பது விரதம்

விளக்கம்
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

Transliteration
Kaapathu Viratham

English Translation
Fasting is good.

கிழமை பட வாழ்

34  கிழமை பட வாழ்

விளக்கம்
உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

Transliteration
Kizhamaipada Vaazh

English Translation
Live according to days.

கீழ்மை யகற்று

35  கீழ்மை யகற்று

விளக்கம்
இழிவான குணஞ் செயல்களை நீக்கு

Transliteration
Keezhmai Agatru

English Translation
Come out of Poverty.

குணமது கைவிடேல்

36  குணமது கைவிடேல்

விளக்கம்
நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

Transliteration
Gunamathu Kaividel

English Translation
Don't lose character.

கூடிப் பிரியேல்

37  கூடிப் பிரியேல்

விளக்கம்
நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே

Transliteration
Koodi Piriyel

English Translation
Don't forsake friends.

கெடுப்பது ஓழி.

38  கெடுப்பது ஓழி.

விளக்கம்
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

Transliteration
Kedupathu Ozhi

English Translation
Abandon animosity.

கேள்வி முயல்

39  கேள்வி முயல்

விளக்கம்
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்

Transliteration
Kelvi Muyal

English Translation
Learn by questioning.

கைவினை கரவேல்

40  கைவினை கரவேல்

விளக்கம்
உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

Transliteration
Kaivinai Karavel

English Translation
Learn handicraft.

கொள்ளை விரும்பேல்

41  கொள்ளை விரும்பேல்

விளக்கம்
பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

Transliteration
Kollai Virumbel

English Translation
Don't swindle.

கோதாட் டொழி

42  கோதாட் டொழி

விளக்கம்
குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

Transliteration
Kodhatu Ozhi

English Translation
Ban all illegal games.

கௌவை அகற்று

43  கௌவை அகற்று

விளக்கம்
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

Transliteration
Kavvai Agatru

English Translation
Don't vilify.

 
Top